ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தனது தலைமைத்துவம் தொடர்பில் திருப்தியின்மை காணப்பட்டால், தலைமைத்துவ பதவியிலிருந்து விலகுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்ததாக எமது இணையதளத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதையிட்டு, அந்தக் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்ஹ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், கட்சித் தலைமைத்துவத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 ஆசங்களைப் பெற்றிருக்கும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டிருந்தது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’