வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

அரந்தலாவை பௌத்த பிக்குகள் பொதுமக்கள் படுகொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை-பிரதியமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்)!


அம்பாறையின் அரந்தலாவையில் பௌத்த பிக்குகளும் சிவிலியன்களும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கண்டிக்கு நேற்று விஜயம் செய்த பிரதியமைச்சர் முரளிதரன்,
அஸ்கிரிய, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரந்தலாவ பௌத்த குருக்கள் மற்றும் அப்பிரதேச சிவிலியன்கள் ஆகியோர்களினது கொலைச் சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை. நான் அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபாகரனோடு செயலாற்றி வந்தேன். பொட்டு அம்மான், நியூட்டன், குமாரப்பா போன்றோரே இதனைச் செய்துள்ளனர். இந்த விடயம் இராணுவத்தினருக்கும் நன்கு தெரியும். வீணாக என்மீது பழி சுமத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1,63,000 அகதிகள் தற்போது அவர்களினது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இவர்கள் நிரந்தரமான இயல்பு வாழ்க்கையைப் பெறுவதற்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடியிருப்புகள், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் செய்து தரவேண்டும். ஆகவே இதற்காக சகல அமைச்சர்களிடமும் கலந்தாலோசித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன். அகதிகளாகவும் அநாதைகளாகவும் உள்ள மக்களின் வாழ்வாதார சுபீட்சத்திற்காக தமிழ், முஸ்லிம், சிங்களமென்ற வேறுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நான் சமமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினதும் அரசாங்கத் தினதும் அமைச்சுகளினதும் உதவிகள் கிட்டும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’