வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 31 மே, 2010

சீபா ஒப்பந்தம் குறித்து அரசு எமக்குத் தெளிவுபடுத்தவில்லை : ஐதேக

இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள சீபா ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்திலுள்ள பிரதான எதிர்க்கட்சியான தமக்கு எதனையும் தெளிவுப்படுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கமோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ இந்த ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதனையும் குறிப்பிடாமல் மௌனம் காத்து வருவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, இதனை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டியது ஜனாதிபதியின் கடமையும் பொறுப்புமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமாத்திரமல்ல, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இலங்கையிலுள்ள பிரதி இந்திய உயர்ஸ்தானிகருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகவும் சீபா ஒப்பந்த்தின் நகல் ஒன்றைத் தமது கட்சிக்கு வழங்குமாறு அவரிடம் கோரியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளே தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஒப்பந்தம் தொடர்பாக தெளிவுபடுத்துவதாக பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார் ஜயலத் ஜெயவர்தன.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு ஜனநாயக ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் செயற்படும்போது மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சியை மதிக்காமல் செயற்பட முயற்சிப்பது துரதிஷ்டவசமான செயல் என கொழும்பில இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
இருநாடுகளுக்கும் இடையிலான மிக தீர்க்கமான ஒரு ஒப்பந்தமே இந்த சீபா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்திலுள்ள சில விடயங்கள் தொடர்பில் வர்த்தக சமூகத்தினர் மத்தியில் அச்சமானதொரு சூழ்நிலையே காணப்படுகின்றது. இதன் காரணமாகவே அவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மகஜர் ஒன்றையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தனர்.
இலங்கைக்கு பாதகமான எந்தவொரு முடிவையும் எடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’