வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 31 மே, 2010

கிளிநொச்சி கணேசபுரத்தில் மனிதப்புதைகுழி! மலகூடக் குழியின் மேற்பரப்பில் 4 சடலங்கள்!! மேலும் மனித எச்சங்கள் இருக்கலாம் எனச் சந்தேகம்

கிளிநொச்சி நகரை அண்டிய கணேச புரத்தில் மனிதப் புதைகுழி இருப்பது குறித்து வெளியான தகவலை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலசலகூடக் குழியைத் துப்புரவு செய்ய முற்பட்ட வேளை, அங்கு கறுப்புப் பொலித் தீனால் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் இருப்பதை வீட்டின் உரிமை யாளர் கண் டுள்ளார்.
இதுகுறித்து உரிமையாளரான நவரத் தினம் என்பவர் கிராம சேவையாளரின் உத வியுடன் பொலிஸில் முறைப்பாடு செய் துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து கிளி நொச்சி நீதிவான் எஸ். சிவகுமார் சடலங் கள் இருப்பதாகக் கூறப்படும் மலசலகூடக் குழியை (புதைகுழியை) நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். சம்பவ இடத் தில் நீதிவான் விசாரணையும் நடத் தினார். கிளிநொச்சி வைத்தியசாலை டாக்டரும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.
நேற்றைய விசாரணையின் பின்னர் நீதிவான் இன்று புதைகுழியைத் தோண்டு மாறு உத்தரவிட்டார்மலசலக் கூடக் குழி மணல் மற்றும் குப்பைகள் போன்றவை போடப்பட்டு மூடப்பட்டுள்ளதால், கனரக இயந்திரங்களைக் (""பெக்கோ'') கொண்டு அதனைக் கிளறித் தோண்டி எடுக்குமாறு நீதிவான் தமது உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கறுப்புப் பொலித்தீனில் உள்ள சடலங்கள் மண்ணுடன் சேர்ந்திருப்பதால் தம்மால் பரிசோதனை செய்யமுடியாது என கிளிநொச்சி வைத்தியசாலை டாக்டர், நீதிவானிடம் தெரிவித்ததை அடுத்து, சட்டவைத்திய அதிகாரியை இன்று அழைத்துவருமாறு நீதிவான் பொலிஸாரைப் பணித்தார்.
இதேவேளை, கணேசபுரத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதியே மீள்குடியேற்றம் ஆரம்பமானதாகவும், அதற்கு முன்னரே இந்தக் குழியில் சடலங்கள் போடப்பட்டு மூடப்பட்டிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது :
வீட்டுக்காரர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னரே மலசலக் கூடக்குழியைத் துப்புரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். குழியைத் துப்புரவுசெய்ய ஆரம்பித்துள்ளனர் குழியின் மேல் மூடப்பட்டிருந்த ""பிளேற்'' அங்கு காணப்படவில்லை. மேற் பரப்பில் மணல் போடப்பட்டுக் குப்பை கூளங்கள் போடப்பட்டிருந்தன.
அதனால் சகிக்கமுடியாதவாறு துர்நாற்றம் ஏதும் இருக்கவில்லை. குப்பைகளை அகற்றிய வேளையில், கறுப்புப் பொலித்தீன்கள் தெரிந்தன. அவற்றை அகற்ற முற்பட்டபோதே சிதைந்த எலுப்புகள் அடங்கிய மனித எச்சங்கள் தெரிந்தன.
அநேகமாக அங்கு மேல் மட்டத்தில் நான்கு சடலங்களின் எச்சங்கள் இருக்கலாம் என்று ஓரளவு ஊகிக்கப்படுகிறது.
குழியின் கீழ்ப்பகுதியில் மேலும் அழுகிய சடலங்களின் எச்சங்கள் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’