வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 30 மே, 2010

தெ.ஆபிரிக்கா- மே.கிந்திய போட்டியில் தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆபிரிக்க அணி 47.2 ஓவரில் 224 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்கா அணி சார்பில் டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 70 ஓட்டங்களை எடுத்தார். அவருக்கு அடுத்தப்படியாக ஹசிம்அம்லா 34 ஓட்டங்களை எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு சார்பில் போலர்ட் 3 விக்கெட்டும், சுலைமான் பென், பிராவோ தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள்.
225 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் மார்னே மார்கலின் அபாரமான பந்துவீச்சால் திணறியது.
இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. தென்னாபிரிக்கா அணி 67 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
3ஆவது போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி பரிதாபமாக தோற்றது. ரிச்சாட்ஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை எடுத்தார். மார்னே மார்கல் 21 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். லாங்வெல்ட் 3 விக்கெட்டுக்களை எடுத்தார். ஆட்டநாயகனாக டிவில்லியர் தெரிவு செய்யப்பட்டார்.
நேற்றைய வெற்றி மூலம் தென்ஆபிரிக்கா தொடரை வென்றது. ஏற்கனவே முதல் 2 ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று இருந்தது. இன்னும் 2 ஒரு நாள் போட்டிகள் எஞ்சி உள்ளன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’