வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 16 மே, 2010

முஸ்லிம் காங்ரஸிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு வெற்றியளிக்குமா?


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இவ்வாறான ஒரு சந்திப்பு ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் செயலாளர் நாயகம் ஹசன் அலி மற்றும் பிரதி செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக நாடளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் பிரதி செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர், சந்திப்பு வெற்றிகாரமான முறையில் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் இவ்வாறான சந்திப்புக்களை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இரண்டு கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பின் பிரதான நோக்கம் அரசியல் யாப்பு மாற்ற நடவடிக்கையின் போது சிறுபான்மையினரின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதுடன் நாடளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளுடனும் இது சம்பந்தமாக கலந்துரையாடி சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாத அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சில் ஈடுபடவுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறு அனைத்து சிறுபான்மைக் கட்சிகளுடனும் கலந்துரையாடி அரசியல் அமைப்பு மாற்றத்தின் போது சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாத ஒர் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவுள்ளோம். அத்துடன் அரசியல் அமைப்பு மாற்றம் சம்பந்தமாக அரசுடன் பேச்சு நடாத்தவும் முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது என்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இவ்வாறான பேச்சுவார்த்தைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றோம். இப்பேச்சுவார்த்தை மூலம் சிறுபான்மையினத்தவர்கள் எதிநோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே பிரதான நோக்கமாகும்.
இப்பேச்சுவார்த்தையில் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளையும் மிகவிரைவில் இணைத்துக்கொள்ளவுள்ளோம். மேலும் இப்பேச்சுவார்த்தை மூலம் தங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோமே தவிர வேறு எவருக்கும் விரோதமாக செயற்படவில்லை என்றும் நாடளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’