வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 16 மே, 2010

தொழில் துறைகளின் முன்னேற்றத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வெளிநாடுகளின் உதவிகளையும் பெற்று யாழ் குடாநாட்டில் கடற்தொழில் மேலும் விருத்தி செய்யப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாவல்கட்டு மக்கள் இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையோற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் மக்களோடு மக்களாக நின்று மக்களுக்காக பணி செய்வதையே நாம் எமது முதன்மை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.
இந்தக் கிராமத்திலும் கடற்தொழிலாளர்களினது எதிர்கால வளமான வாழ்வுக்காக நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
அந்த வகையில் மக்கள் வங்கியூடாக கடன் வழங்கி தொழிற் துறைகளை மேம்படுத்தவும் அதன் மூலம் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் முடியுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
அத்துடன் பல வெளிநாட்டு தொழில்சார் பிரமுகர்களுடன் கடல் உணவு வர்த்தகம் உட்பட்ட தொழில்துறைகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் எனவே சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி கடற்தொழிலை அபிவிருத்தி செய்வதுடன் சமூகத்தை நல்வழிப்படுத்துவதோடு ஏனைய சமூகப் பணிகளையும் செய்ய வேண்டுமென்பதே எமது விருப்பமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’