வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 15 மே, 2010

கிளிநொச்சி வாகன விபத்தில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தைச் சோ்ந்த 6 பெண்கள் படுகாயம்


கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஆறு பெண்கள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிதிவெடி அகற்றும் "ஹலோ டிரஸ்ற்" நிறுவனத்துக்கு சொந்தமான லாண்ட் றோவர் ரக வாகனம் வீதியைவிட்டு விலகி புரண்டதால் இந்த விபத்து இடம்பெற்றது.
இதன்போது இந்த லாண்ட் றோவர் வாகனத்தில் பயணம் செய்த அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆறு பெண்கள் படுகாயமடைந்தனர்.
ஸ்கந்தபுரத்திலிருந்து இந்த வாகனம் கிளிநொச்சி நோக்கி வரும்போது பிற்பகல் 1 மணியளவில் ஸ்கந்தபுரம் சந்தைக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இந்த வாகனத்தில் பயணம் செய்த

1. எஸ்.கிருஷ்ணவேணி (27 வயது, திருநகர், கிளிநொச்சி),

2. எஸ்.மனோரஞ்சனி (27 வயது, செட்டிகுளம் நலன்புரி நிலையம்)

3. கே.கௌரி (24 வயது, விவேகானந்த நகர், கிளிநொச்சி),

4. எம். தீபலோஜினி (26 வயது ஜெயந்தி நகர், கிளிநொச்சி),

5. கே.கிருஷ்ணவேணி (28 வயது, பெரியபரந்தன்),

6. எல்.லக்ஷ்ஷிகா (27 வயது, கிளிநொச்சி)

ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
இவர்கள் முதலில் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.
வாகனம் ஓடிக்கொண்டிருந்தபோது மாணவர்கள் வீதிக்குக் குறுக்கே சென்றதால் சாரதி வாகனத்தை சடுதியாக நிறுத்த முயன்றபோது விபத்து இடம்பெற்றதாகக் காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’