வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 15 மே, 2010

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை கண்காணிக்கும் இலங்கை அரசு· அவுஸ்திரேலியப் பத்திரிகை தகவல்


புலம்பெயர் தமிழர்களைக் கண்காணிக் கும் புதிய நிகழ்ச்சிநிரல் ஒன்றை இலங்கை அரசு மும்முரமாக முன்னெடுத்து வருகின் றது என்று தனக்குக் கிடைத்த ஆதாரங் களை மேற்கோள்காட்டி "த அவுஸ்திரேலியன்' என்ற அவுஸ்திரேலியப் பத்திரிகை செய்தி ஒன்றைப் பிரசுரித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசுத் தேர்தலின் பின் அரசினால் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டுவரும் இந்நடவடிக்கைகள் புலம் பெயர் தமிழர்களைப் பெரிதும் பீதியில் ஆழ்த்தியுள்ளன என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
அப்பத்திரிகைச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
"நாடு கடந்த தமிழீழ அரசுத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் கண்காணிக் கப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளனர் என்று இலங்கை அரசு அறிவித் துள்ளது. அவர்கள் இலங்கை திரும்ப முடியாது என்றும் எச்சரித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசுத் தேர்தலில் கனடா,பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து போன்ற மேற் குலக நாடுகளில் வாழும் புலம்பெயர் தமி ழர்கள் வகைதொகை இன்றிக் கலந்துகொண்டு வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களே 135 பிரதிநிதிகள் கொண்ட அரசை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் மேற்குலக நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அரசின் "கண்காணிப்பு' அறிவிப்பை அடுத்துப் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். அதே நேரம், இலங்கைத் தூதரகங்களுக்கு அலு வல்களுக்காகச் செல்கின்றவர்கள் கேள்வி கேட்டுத் துளைக்கப்படுகின்றனர் என் றும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’