வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

முல்லை முகாம்: இந்தியாவின் 6 மாத கால விசா பிரபாகரனின் தாயாரால் நிராகரிப்பு

நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக அரசாங்கத்தின் அழைப்பிற்கு காத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உரிய அழைப்பு விடுக்கப்பட்டால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக அரசாங்கம் இதுவரையில் எவ்வித அழைப்பையும் விடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கும், தமிழர் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உண்மையில் விரும்பினால் அதற்கு பூரண ஆதரவளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆதரவு வழங்கும் போது அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’