வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

இந்தியாவின் 6 மாத கால விசா பிரபாகரனின் தாயாரால் நிராகரிப்பு


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள், இந்தியாவினால் வழங்கப்பட்ட 6 மாதகால விசாவை நிராகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனையுடன் கூடிய அனுமதியினை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியதை அடுத்தே அவர் அந்த விசாவினை நிராகரித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவில் தங்கியுள்ள பார்வதி அம்மாள் தனது சிகிச்சைகளுக்காக அண்மையில் சென்னை சென்றிருந்தபோது விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை பெற, மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு, இந்தியத் தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு பார்வதி அம்மாள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இதை மத்திய அரசுக்கு அனுப்பிய கருணாநிதி, பார்வதி அம்மாள் தமிழகத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தரலாம் என்றும் பரி்ந்துரைத்தார்.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, பார்வதி அம்மாள் மீதான தடையை நீக்கி, அவர் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதி அளித்தது. இதற்காக அவருக்கு 6மாத கால விசாவினையும் வழங்கியது என்று முதல்வர் கருணாநிதி நேற்று சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை அடுத்தே இந்தியாவினால் வழங்கப்பட்ட 6 மாதகால விசாவை பார்வதி அம்மாள் நிராகரித்திருப்பதாக இந்தியத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’