வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

கல்முனை மாநகரசபை முதல்வர் பதவி மசூர் மெளலானாவுக்கு கிடைக்காது?


கல்முனை மாநகர சபையின் முதல்வராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் இதுவரையில் யாரும் தீர்மானிக்கப்படவில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடமிருந்து தமக்கு கடிதமொன்று கிடைக்கப்பெறும் வரையில் காத்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.
மேற்படி கடிதம் கிடைக்கப்பெறும் பட்சத்திலேயே தமது கட்சி உறுப்பினர்களில் யாரை மாநகர சபையின் முதல்வராக நியமிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயராக இருந்த எச்.எம்.எம்.ஹரிஸ், நாடளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து குறித்த மாநகரசபையின் மேயர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றகிப்பை கல்முனை மாநகர சபையின் முதல்வராக நியமிக்குமாறு கட்சித் தலைமைத்துவத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மாநகர மேயராக மசூர் மெளலானாவே நியமிக்கப்படுவார் என்று எமது  இணையதளதிற்கு கடந்தவாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’