வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

போர்க்குற்றம் தொடர்பாக சாட்சியமளிப்பவர்களை கோத்தபாய அச்சுறுத்தவில்லை : ஐ.நா. உதவி பிரதிநிதி


இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் எவராவது சாட்சியமளித்தால் அவருக்கு உயிராபத்து ஏற்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்ததாக கூறப்படுவதை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை உதவி வதிவிட பிரதிநிதி பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்னர் சிற்றி பிரஸ் செய்திச் சேவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த 7 ம் திகதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் செய்தியாளர் மாநாட்டின் போது ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர் மாட்டின் நெஸிட்கியிடம் இன்னர் சிற்றி பிரஸ், கோத்தபாய தெரிவித்ததாக கூறி இந்த விடயத்தை கவனத்திற்கு கொண்டு வந்தது.
இந்தநிலையில் தாம் குறித்த விட தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கேட்ட போது, தாம் அவ்வாறான கருத்தொன்றை தெரிவிவிக்கவில்லை என்றும், அது முற்றிலும் பிழையான தகவல் என்றும் அவர் தெரிவித்ததாக, பந்துல ஜெயசேகர 'இன்னர் சிற்றி பிரஸிற்குத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த செய்தியை திருத்தத்துடன் தங்களுடைய இணைத்தளத்தில் வெளியிடுமாறு பந்துலு ஜயசேகர இன்னர் சிற்றி பிரஸிடம் கேட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’