வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 மே, 2010

யாழ்.மாவட்டப் பொலிஸ் நிலையங்களுக்கு அடுத்த மாதத்தில் 400 பேர் நியமனமாவர்

யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணிபுரிய 400 பொலி ஸார் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
யாழ். பொலிஸ் தலைமையக வட்டா ரங்கள் இதனைத் தெரிவித்தன.

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு ஆள்சேர்ப்பதற்காக குடாநாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை, மருத்துவப் பரீட்சை ஆகியவற்றுக்குத் தோற்றித் தெரிவானவர் களுக்கு இன்னமும் நியமனம் வழங்கப் படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் வினவியபோதே, மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. 400 பேருக்கு நியமனம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. நடைபெற்ற தேர்தல்கள் காரண மாக நியமனங்கள் வழங்கப்படவில்லை. எனினும் இவர்களுக்கு நியமனம் வழங்கு வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மாதமளவில் இந்த நியமனம் வழங்கப்படும் என்று மேலும் தெரிவிக் கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’