வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 மே, 2010

வெற்றி பெற்று முகமுயர்த்தி நிற்கும் மக்கள் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே!

மலை சுமந்த உன் தோள்கள் மீது
மாலை சுமந்து வருகின்றாய்!..

உன் தோளில்
மாலை விழுந்தாலும்
அதில் பூக்கள் கழன்று
உன் காலடியில் விழும்!

ஏன்?.
.

உன் தோள் மீது இருக்க
பூக்களுக்கு சம்மதமில்லை.

நீ நடந்து வந்த
பாதை எங்கும்
முட்களும் இருந்தன..

உன் பாதங்களுக்கு
ஒத்தடம் கொடுக்கவே
பூக்கள் ஆசைப்படுகின்றன..

எங்கள் தேசத்தின்
காலைச்சூரியனே!..

சூழ்ந்து வரும்
பகைகள் ஒவ்வொன்றும்
உனக்கு முன்னாள்
வெறும் பனித்துளிகள்!..

சுனாமியையே எதிர்கொண்டவன் நீ
உன் மீது தூவப்படும்
அவதூறுகள் ஒவ்வொன்றும்
உனக்கு சிறு மழைத்துளிகள்!..

வஞ்சக வலைகள்
இனியும் வந்து விழும்..

நெஞ்சகம் உனக்கு
தூற்றலை எதிர் கொள்ள
இரும்பறை அல்லவா?..

எது வரினும் வரட்டும்
ஆற்றலால் எதிர் கொள்!..

வாரி வழங்குவதால்
பாரி வள்ளல் நீ என்கிறார்கள்..

சரிந்து கிடக்கிறது
உன் மக்களின்
மன முல்லைகள்..

எழுந்து நிற்கும்
உன் தோள்கள் மீது
தூக்கி நிறுத்து..

காற்றுக்கு விலங்கிட்டு
கைது செய்யும் கற்பனையில்
உன்னையும் தேடியவர்கள்
தோற்றுப்போனார்கள்..

நீ நேசித்த மக்கள் மட்டும்
தோற்கவில்லை என்பதற்காக
நீ யார் என்று காட்டு..

உறவுக்கு கரம் நீட்டு
உரிமைக்கு குரல் காட்டு..

கரு முகில் அகலும்
வரும் தடை விலகும்..

நீ செல்லும் வழி வெல்லும்
நிலமும் கடல் நீரும்
பனையும் பசும் வயலும்
நீ நேசித்த மானிட சமூகமும்
உன் பேர் சொல்லும்?.

விலங்கிடப்பட்ட மனித நேயம்
மறுபடியும் எழுந்து வர
நாங்களும் இணைந்து பேசுவோம்!..

அழிந்து போன எம் தேசத்தில்
உறைந்து போன எம் வாழ்வு

நீ வளர்க்கும்
அக்கினி குஞ்சுகளால்
உருகி ஊற்றெடுத்து
சமாதான நதியாக
எங்கும் பரவட்டும்!..

வாழ்வின் சுகங்களை
சகலரும் அனுபவிக்க..

உரிமை பெற்ற
சுதந்திர பிரiஐகளாக
எமது மக்கள்
முகமுயர்த்தி நிற்ற..

மக்கள் சக்தி உன் பக்கம்!..

நன்றி ? எங்கள் தேசம் இணையம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’