நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகிறது. இதனால் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 740 குடும்பங்களைச் சேர்ந்த 5 லட்சத்து 22 ஆயிரத்து 171 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் 280 குடும்பங்கள் முற்றாக தமது வீடுகளை இழந்துள்ளதாகவும் அந்நிலையத்தில் பிரதிப் பணிப்பாளர் கே.பி.ஏ. தர்மரத்ன இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டம் - 20,569 குடும்பங்களை சேர்ந்த 88,344 பேர்
கம்பஹா மாவட்டம் - 47,717 குடும்பங்களை சேர்ந்த 192,280 பேர்
கொழும்பு மாவட்டம் - 33,168 குடும்பங்களை சேர்ந்த 142,450 பேர்
இரத்தினபுரி மாவட்டம் - 58 குடும்பங்களை சேர்ந்த 230 பேர்
குருநாகலை மாவட்டம் - 218 குடும்பங்களை சேர்ந்த 857 பேர்
காலி மாவட்டம் - 18,081 குடும்பங்களை 86484 சேர்ந்த பேர்
புத்தளம் மாவட்டம் - 1,744 குடும்பங்களை சேர்ந்த 6,207 பேர்
திருகோணமலை மாவட்டம் - 212 குடும்பங்களை சேர்ந்த 837 பேர்
அனுராதபுரம் மாவட்டம் - 963 குடும்பங்களை சேர்ந்த 4,473 பேர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’