அக்குறணை நகரத்தில் உள்ள சட்டவிரோதமான கட்டிடங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன. அக்குறணை நகரத்தில் அண்மை காலமாக சட்டவிரோத கட்டிடங்கள் அதிகரித்துள்ளதுடன் இதன் காரணமாகப் பல்வேறு விமர்சனங்களும் அவ்வப்போது எழுந்துள்ளன.
குறிப்பாக தொற்று நோய்கள் பரவும் சந்தர்ப்பங்களில் சட்டவிரோத கட்டிடங்கள் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றன.கடந்த வருடம் கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவியபோது அக்குறணையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதேபோல் இவ்வருடமும் அக்குறணையில் டெங்கு, வயிற்றுளைவு போன்ற நோய்களால் அதிகமானோர் இனம் காணப்பட்டுள்ளனர்.
எனவே இதன் காரணமாகவே சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப் படவேண்டுமென்ற கோஷம் வலுப்பெற்ற நிலையில் அவை தற்போது அகற்றப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’