வவுனியா மற்றும் யாழ்பாணத்தில் இன்று நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
இதனை முன்னிட்டு வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.இப்பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ். குடாநாட்டின் பல பாகாங்களில் இருந்தும் மக்கள் பஸ்களில் ஏற்றப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.
அத்துடன் வவுனியாவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மன்னாரில் இருந்தும் பஸ்களில் மக்கள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர்.இதனால் அங்கு தூர இடங்களுக்கான பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன்,பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, மன்னார், கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’