ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்களும் புளொட் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் இன்றையதினம் முற்பகல் செட்டிகுளம் அருணாசலம் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
புளொட் தலைவருடன் புளொட் வேட்பாளர்களான வன்னி பிராந்திய புளொட் அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தர் பசுபதி பரசோதிலிங்கம் ஆகியோரும் மேற்படி விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். அங்கு கட்சியின் வேலைத் திட்டங்கள் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்திய புளொட் தலைவர் உள்ளிட்ட புளொட் வேட்பாளர்கள் பொதுத் தேர்தலின் போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’