திருமலை வெருகல் முருகன் ஆலய குருக்கள் சிறிராம் திங்கட்கிழமை பிற்பகல் வெருகல் ஆலயத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோரால் வெள்ளைவானில் கடத்தப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் சேருநுவர பொலிஸார் இவரை மீட்டுள்ளதாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் என்ற காரணத்தாலேயே கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் பிரச்சாரப் பணிகளுக்காக செல்வதற்காக தாம் வெருகல் முருகன் அலயத்தில் நின்றபோது வெள்ளைநிற வேனில் வந்தவர்கள் இவரை கடத்திச் சென்று கடுமையாக தாக்கி பின்னர் மாலையளவில் சேருநுவர பொலிசார் இவரை மீட்டுள்ளனர். இவரை கடத்தி செல்லும்போது த.ம.வி.புலிகள் கட்சிக்கு நீ வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என அச்சுறுத்தி அவரது தலை மற்றும் கால் கை ஆகிய பகுதிகளில் வெகுவாக தாக்கி உள்ளார்கள் இதனால் அவர் மிகவும் சுகவீனம் அடைந்திருக்கின்றார் என்றும் ரி.எம்.வி.பி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’