அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போர் காரணமாக யாழ்ப்பாண குடாநாட்டில் 73 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர் காரணமாக மூடப்பட்ட அநேகமான பாடசாலைகள் இன்னமும் திறக்கப்படவில்லை என இராணுவ சிவில் இணைப்புக் காரியாலயம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண நகரத்தை அண்டிய 14 பாடசாலைகளும், தீவுப் பகுதிகளைச் சேர்ந்த 26 பாடசாலைகளும், சாவகச்சேரியில் 11 பாடசாலைகளும், வலிகாமம் பிரதேசத்தில் 19 பாடசாலைகளும், வடமராட்சி பகுதியில் 3 பாடசாலைகளும் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் 13 பாடசாலைகள் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் அமையப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவ வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’