இலங்கை போரில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவு இணைய தளம் 'நிதர்சனம்'.
இந்த இணையதளத்தில் இலங்கை ராணுவத்திற்கும் , விடுதலைப்பலிகளுக்கும் இடையே நடைபெற்ற போர் குறித்த நிகழ்வுகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தது.
இந்த தளம் மற்றும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளரான சேரலாதன் செயல்பட்டு வந்தார். இவர் இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், தற்போது சேரலாதன் உயிருடன் உள்ளார்.
இலங்கை ராணுவத்துடனான இறுதிக்கட்ட போரில் சேரலாதனுக்கு காலில் காயம் அடைந்தாகவும் , இதனால், இவர் சக போராளியிடம் தான் குப்பி கடிக்கப் போவதாகவும், தன்னை விட்டுவிட்டு போகுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக சமர்க்களத்தில் நின்ற போராளிகள் அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டனர். ஆனால் இவர் குப்பியை கடிப்பதற்கு முன்பாகவே கடும் ரத்தப்போக்கால் மயக்கமடைந்து விட்டாராம்.
அப் பகுதிக்கு வந்த ராணுவம் இவரை தூக்கிச் சென்று பல மாதங்களாக தீவிர சிகிச்சை அளித்துள்ளது.
இதனையடுத்து சுயநினைவு திரும்பிய சேரலாதன், தான் நிதர்சனப் பொறுப்பாளர் என தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.
இதயடுத்து அவர் தற்போது இலங்கை ராணுவத்தின் புலிகளுக்கான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’