வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஏப்ரல், 2010

தேர்தல் ஏற்பாடுகள் நிறைவடைந்தன

இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன.
வியாழக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல்
கடந்த ஜானாதிபதி தேர்தலின் போது வாக்களிக்க காத்திருந்த மக்கள்

நாட்டின் பல பாகங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பின்னரான பகுதியிலும் வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து கூடுதலான மக்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், அவர்களும் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் சுதாகரன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
இடைத்தங்கல் முகாம்களிலும் வாக்குச் சாவடிகள்
மனிக்பாம் முகாம்
மனிக்பாம் முகாம்களிலுள்ள மக்கள்
இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிக்பாம் இடைத்தங்கல் முகாம், விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாம்கள் என்பவற்றில் 27 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்குள்ளவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம் இடம்பெறாத முல்லைத்தீவு மாவட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த 32 வாக்குச்சாவடிகள் வவுனியா நகரத்தில் கொத்தணி வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக 18 வாக்குச் சாவடிகள் இம்முறை அமைக்கப்பட்டிருக்கின்றன.
புத்தளத்தில் ஏற்பாடுகள்
புத்தளம் முகாம்
புத்தளம் முகாம்
புத்தளத்தில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்களுக்கு வழக்கம் போல 40க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பார்கள் என வன்னிமாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இடம் பெயர்ந்த நிலையில் மட்டக்களப்பில் மட்டக்களப்பில் தங்கியிருக்கும் வாக்காளர்களுக்காக தனியாக 9 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
திருகோணமலையில் வேட்பாளர் மீது தாக்குதல்
திருகோணமலை அரசு மருத்துவமனை
திருகோணமலை அரசு மருத்துவமனை
நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியின் வேட்பாளர் பிலிப்பையா ஜான்சன் செவ்வாய்கிழமை நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாதோரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ள அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து திருகோணமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மூதூர் பகுதிக்கான வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கோமரங்கடவைக்கான வாக்குப் பெட்டிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’