வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஏப்ரல், 2010

இறுதிநேர தேர்தல் கருத்துக் கணிப்பு ஈ.பி.டி.பி. முன்னணியில்!

இலங்கையிலிருந்து அனைத்து நாடுகளிலும் ஒளிபரப்பாகி வரும் டான் தொலைக்காட்சி தமது யாழ்ப்பாண நேயர்களிடம் நேற்று முன்தினம் (05) திங்கட்கிழமை தேர்தல் கருத்துக் கணிப்பு ஒன்றை நடாத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
அதிக ஆசனங்களைப் பெறுமெனத் தெரிய வந்திருக்கின்றது. நேயர்கள் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள் என்பதையும் எதற்காக என்பதையும் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டிருந்தனர். இரண்டு மணி நேரங்கள் இடம்பெற்ற இந்தக் கருத்துக் கணிப்பு நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் வருமாறு

1. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) - 72 வீதம்
2. தமிழரசுக் கட்சி - 14 வீதம்
3. ஈ.பி.ஆர்.எல்.எவ் புளொட் கூட்டணி - 12 வீதம்
4. ஐக்கிய தேசியக் கட்சி - 02 வீதம்

டான் தொலைக்காட்சியின் இந்த நிகழ்ச்சி உலகமெங்கும் ஒளிபரப்பப்பட்ட போதிலும் இந்தக் கருத்துக் கணிப்பில் யாழ் மாவட்ட நேயர்கள் மாத்திரமே கணக்கிடப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’