இலங்கைத்தீவின் அனைத்து மக்களும் அச்சமற்ற சூழலில் நிம்மதியுடனும், மன நிறைவுடனும் வாழத் தயாராகும் இச்சந்தர்ப்பத்தில் தமிழ் - சிங்கள மக்களால் நிம்மதியாகக் கொண்டாடக் கூடிய சூழ்நிலையில் விகிர்தி புதுவருடப் பிறப்பு அமைந்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்தகால அசாதாரணச் சூழலில் எமது மக்கள் பல வருடங்களுக்கான பின்னடைவுகளுடன் புதுவருடங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கவே இயலாத வகையில் துன்ப துயரங்கள் சூழ்ந்த இருண்ட யுகத்தினுள் வாழ்ந்து வந்துள்ள நிலையில் இவ்வருடம் எமது மக்கள் ஒளிமயமானதொரு எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதற்குத் தயாராகி வரும் சூழலில் விகிர்தி புதுவருடம் பிறக்கின்றது என்றும் இந்தப் புதுவருடம் அல்லல்பட்டு வந்துள்ள எமது மக்களுக்கு நிம்மதியின் அரவணைப்பாக அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இதுவரையில் தங்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தப்படாதிருக்கும் எமது உறவுகள் உடனடியாகக் குடியமர்த்தப்படுவதற்கும், சிறைகளிலும் புனர்வாழ்வு நிலையங்களிலும் உள்ள ஏனையவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவதற்கும் எமது மக்களின் அனைத்துத் தொழில் துறைகளும் சிறந்தோங்குவதற்கும் இந்த புதுவருடத்தில் நிச்சயம் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன் தங்களது உறவுகளைப் பிரிந்து துன்பமடைந்திருக்கும் அனைவரினதும் துன்பங்கள் கூடிய விரைவில் விலகி விடும் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், எம்மக்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’