ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கரும பீடமொன்று 2010 ஏப்பிரல் மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை 17ந் திகதி சனிக்கிழமை மற்றும் 18ந் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இயங்கவுள்ளது.
இக்கருமபீடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான முக்கியமான தகவல்களும் ஆவணங்களும் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமையினால் இதற்கு சமுகமளிக்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் நுழைவதற்கு வசதியாக தமது அடையாள அட்டையை கொண்டு வரும்படியும் பாராளுமன்ற கட்டடத்துக்குள் வரும்போது உறுப்பினர் நுழைவாயிலை பாவிக்கும்படியும் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இது தொடர்பாக மேலும் விபரங்கள் தேவைப்படின் 2010 ஏப்ரல் மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணிவரை பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் திணைக்களத்தின் சபை ஆவண அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர்களான (நிர்வாகம்) எச். ஈ. ஜனகாந்த சில்வா மற்றும் சாம் சமரவீர ஆகியோரை 2777549 2777273 2777304 2777367 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகல உறுப்பினர்களும் அவர்களின் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’