வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

கிணற்றிலிருந்து மாணவி சடலமாக மீட்பு!



யாழ். இந்து மகளிர் கல்லூரியில் விஞ்ஞானத்துறையில் உயர்தரம் கல்வி கற்கும் புண்ணியர்மடம் செம்மணி வீதி நாயன்மார்கட்டைச் சேர்ந்த இ.ஜென்சலா (வயது 19) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது பிரஸ்தாப மாணவி அதிகாலையில் எழுந்து வழமையாகப் படித்து வருபவர். எனினும் நேற்று குறித்த நேரத்தில் மாணவியை காணாத நிலையில் உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது அவர்களின் வீட்டு கிணற்றிலிருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள கோப்பாய் பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’