கோண்டாவில் கிழக்கு சிறி நாராயண சனசமூக நிலையத்தின் 58வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு மறுமலர்ச்சி விளையாட்டுக் கழகத்தின் சார்பில் நடாத்தப்படுகின்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் (14) மாலை சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கோண்டாவில் ஸ்ரீ வல்லிபுரநாதர் தேவஸ்தானத்தில் விஷேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பித்த இந்நிகழ்விற்குத் தலைமை வகித்து உரை நிகழ்த்திய மேற்படி சனசமூக நிலையத் தலைவர் சுஜிவா கோண்டாவில் கிழக்கு சிறி நாராயண சனசமூக நிலையக் கட்டிட நிர்மாணிப்பிற்கென அமைச்சர் ஏற்கனவே 6 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ள நிலையில் தற்போது இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வை நடாத்துவதற்காக 75 000 ரூபா நிதியுதவியையும் அமைச்சர் அவர்கள் தந்து உதவியமை எமக்குப் பெரிதும் பலமாக அமைந்துள்ளதென்றும் இதற்கென அமைச்சர் அவர்களுக்கு கோண்டாவில் கிழக்கு வாழ் மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.இதன் போது அப்பகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதையடுத்து வெகுவிரைவில் கட்டம் கட்டமாக அனைத்துக் கோரிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படுமென உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் தனது கட்சியின் வெற்றிக்காகப் பங்களிப்பாற்றிய அப்பகுதி மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
























0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’