எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவிருக்கும் மறுவாக்களிப்பின் போது நாவலப்பிட்டி வாழ் தமிழ் பேசும் மக்கள் எனக்கு எதிரான சதி முயற்சிகளையும், வன்முறைகளையும் முறியடிக்கும் விதத்தில் துணிச்சலுடன் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டுமேன ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கண்டி மாவட்டத்திலே நான் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவும், அங்கே தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது என்பதற்காகவும் எனக்கு எதிராக ஒருபுறத்திலே வன்முறைகளும், மறுபுறத்திலே முறைகேடான சதி முயற்சிகளையும் சில அரசியல்வாதிகள் முன்னெடுக்கின்றார்கள்.
எனவே எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவிருக்கும் மறுவாக்களிப்பின் போது நாவலப்பிட்டி வாழ் தமிழ் பேசும் மக்கள் எனக்கு எதிரான சதி முயற்சிகளையும், வன்முறைகளையும் முறியடிக்கும் விதத்தில் துணிச்சலுடன் அணித்திரண்டு வாக்களிக்க வேண்டுமேன ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
எதிர்வரும் 22ம் திகதி கூட இருக்கும் 7வது பாராளுமன்றத்திலே நான் இடம்பெறக்கூடாது என்பதற்காக சில சக்திகளினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வன்முறைகளுக்கும், சதி முயற்சிகளுக்கும் நாவலப்பிட்டியில் இருந்தவாறே முகங்கொடுத்து வருகின்றேன்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு மிக சுலபமாக வெற்றி பெற்றிருக்கக்கூடிய நான் கண்டி மாவட்டத்திலே போட்டியிட தீர்மானித்ததன் காரணம் மிக முக்கியமானதாகும். கண்டி மாவட்டத்தில் சகோதர முஸ்லிம், சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று சம அந்தஸ்துடன் வாழ்ந்திடவேண்டும் என்பதுவே எனது நோக்கம்.
இந்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாரிய மனித உரிமை மீறல்களையெல்லாம் சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்திய நான் புதிய பாராளுமன்றத்திற்கு வந்துவிடக்கூடாது என அதிகாரத்தரப்பு விரும்புகின்றது.
மறுபக்கத்திலே தமிழ் மக்களின் கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் கிடைப்பதைவிட, தங்களுக்கு கிடைக்கும் விருப்பு வாக்குகளே முக்கியமானது என இன்னொரு தரப்பு நினைத்து செயல்படுகின்றது.
அதிகாரம் மிக்க தரப்பினர் தமிழ் மக்களை ஜனநாயக வழிக்கு வாருங்கள் என்று கூறிக்கொண்டு மறுபுறத்தில் தமிழ் மக்களுக்கான ஜனநாயக கதவுகளை மூடி வருகின்றார்கள்.
அதேவேளையில் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளை அபகரிக்கும் நோக்கில் சில சதி முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர்கள் சிலரும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இத்தகைய ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்து செயற்படுகின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாம் ஏற்படுத்தியுள்ள ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை அழிக்கவும் நினைக்கின்றார்கள்.
ஆகவே இத்தகைய அனைத்து வன்முறையாளர்களையும், சதிகாரர்களையும் முறியடிக்கும் விதமாக தமிழ் பேசும் வாக்காளர்கள் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவிருக்கும் மறுவாக்களிப்பில் வாக்களிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’