வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஏப்ரல், 2010

சட்ட நடவடிக்கை எடுப்பதாக வெளியான செய்திகளை மறுக்கிறார் : கீதா குமாரசிங்க

தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வெளியான செய்திகளை கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரும், சிங்கள நடிகையுமான கீதா குமாரசிங்க மறுத்துள்ளார்.

ஊடகங்களில் வெளியான செய்தி ஓர் கட்டுக்கதை எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சி உறுப்பினர்களினாலேயே தமக்கு எதிராக சதி நடைபெற்றதாக கீதா குமாரசிங்கவை ஆதாரம் காட்டி பி.பி.சி. சிங்கள சேவை செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் இந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’