குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதி முறைகள் தொடர்ந்தும் ஏழு தினங்களுக்கு அமுலில் உள்ளதாகத் தெரிவித்த அவர் எவரேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக எந்தவித பாகுபாடுகளும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தேர்தல் முடிவுற்று ஏழு நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
"தேர்தலுக்குப் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களில் அநேகமானவை ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான மோதல்களாகும்.
தேர்தலுக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இதுவரை ஐந்து முறைப்பாடுகளே கிடைத்துள்ளன.இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
அதேவேளை புத்தளம் மாவட்ட ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த பாலித ரங்கே பண்டார, அதே கட்சியில் போட்டியிட்டு தோல்வியுற்ற சாந்த அபேசேகர உட்பட அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐ.தே.க. வேட்பாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’