தமிழக பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேரினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதினால் தற்கொலை செய்து கொண்ட இலங்கை தமிழ் பெண்ணுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்துக்கு தமிழக அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த குமார் பத்மாவதி என்ற அவர், அகதி முகாமில் வசித்த வந்த வேiளியில் தமிழகத்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர்.
இந்த நிலையில் இதற்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததை முன்னிட்டு, மனித உரிமைகள் பாதுகாப்பகம் மற்றம், பெரியார் திராவிட கட்சி என்பன ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தன.
எனினும் அதற்கு தமிழக பொலிஸாரும், அரசாங்கமும் அனுமதி வழங்கவில்லை என செய்தியாளர் சந்திப்பின் போது, பெரியார் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
28 வயதுடைய குமார் பத்மாவதி, கரூர் வைத்தியசாலையில் வைத்து தமது மரணப்படுக்கையில் கொடுத்த வாக்குமூலத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் தம்மை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.
எனினும் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் இதற்கு எதிராக தமிழக பொலிசார் மேற்கொள்ளவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் இதற்கான அனுமதியை வழங்க பொலிஸார் மறுத்துள்ளனர். இதன் பின்னணியில் தமிழக அரசாங்கமே செயற்பட்டுள்ளதாக கொளத்தூர் மணி தெரவித்துள்ளார்.
எனவே இது தொடர்பில் விசாரணை நடத்தி, சரியான தண்டனை வழங்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’