இந்தோனேசிய மெராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பாரிய அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலைமையை மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது எனவும், இந்தோனேசிய அரசாங்கம் உறுதியான உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில், படகில் இருந்த தாம் இறங்க தயார் எனவும் அகதிகளின் புதிய பேச்சாளர் நிமல் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய இணையத்தளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக ஒரே படகில் தங்கியிருந்த தாங்கள், எவ்வித வசதிகளும் இன்றி அவஸ்த்தைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 240 அகதிகள் உள்ள இந்த படகில், 31 சிறுவர்கள் உள்ளனர். அவர்களும் தற்போது பல்வேறு நோய்களில் அவதிப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது படகில் இரவு நேரங்களில் உறங்க முடியாத வகையில் எலிகள் கடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலைமையை மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என தெரிவித்த அவர், இந்தோனேசிய அரசாங்கம் உறுதியான உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில், படகில் இருந்த தாம் இறங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது படகில் இருந்து இறங்குவதற்கே அனைவரும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்தோனேசிய அரசாங்கம் தமது பாதுகாப்பு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் உறுதியளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் தடுத்து வைக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக அளவிலான அகதிகள் தற்போது கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’