வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

கே பி உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் : ரோஹித்த போகல்லாகம

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான கே பி எனப்படும் பத்மநாதன் தொடர்;ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்தநிலையில் அவர் அவசியமான நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படுவார் என வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

கே பி, இலங்கையின் இறைமையின் அடிப்படையிலான சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கே.பி. யிடம் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான சர்வதேச தொடர்புகள் தொடர்பில் தகவல்களை பெறவேண்டியுள்ளமையால், அவரை தொடர்ந்து விசாரணை செய்யவேண்டியுள்ளதாக அண்மையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’