புதிய அமைச்சரவையில் 35 முதல் 38 பேர் அமைச்சர்களாகப் பதவிவகிப்பர். நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப் பட்டுள்ளவர்களில் கூடுதல் தகுதி, அனுப வம் மற்றும் திறமையுள்ளவர்களே அமைச் சர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தக வலைத் தெரிவித்துள்ளார்.
"திவயின' சிங்கள நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறியுள் ளார்.
சிரேஷ்ட மற்றும் தகுதியானவர்களுக்கே அமைச்சர் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும். அமைச்சர்களை நியமிக்கு முன்னர் சிரேஷ்ட உயர் அரச அதிகாரி களின் கருத்துக்கள் கேட்கப்படும். அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண் டும் அமைச்சர் நியமனம் வழங்கப்படும் என் றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் விவகாரங்களில் தேர்ச்சி பெறுவது மிகவும் முதன்மையான அவசியமான தேவை என்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆலோ சனை வழங்கினார்.
அமைச்சர்கள் நியமனத்தின்போது அரசி யலில் கூடுதல் அனுபவம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என் றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப் பினர்களின் விருப்பத்தைக் கேட்டு அதன டிப்படையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பா ளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் ஜனாதி பதி சொன்னார்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதி பதி நாளை ஞாயிற்றுக்கிமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடு வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளு மன்ற அலுவல்களில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் புதிய எம்பிக்களுக்கு விளக்கவுரை நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’