வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 17 ஏப்ரல், 2010

பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் வந்த விமானத்திலேயே மலேசியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். வைக்கோ ஆவேசம்

4 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வந்த பார்வதி அம்மாளை, உடனே திருப்பி அனுப்பியதால், அவரது உயிருக்கு எந்த பாதிப்பாவது ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எ‌ன்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூ‌றினா‌ர்.
மலே‌சியா‌வி‌ல் இரு‌ந்து செ‌ன்னை விமான நிலையத்திலிருந்து நே‌ற்‌றிரவு இரவு வ‌ந்த ‌பிரபாகர‌னி‌ன் தாயா‌ர் பார்வதி அம்மாளை அழைத்துச் செல்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையம் வந்தனர்.
எனினும் விமான நிலைய நுழைவாயிலிலேயே வைகோவும், பழ.நெடுமாறனும் காவ‌ல்துறை‌யினரா‌ல் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடுமையான வாக்குவாதத்துக்குப் பின் அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வைகோ, நெடுமாறன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகை‌யி‌ல், 80 வயது நிறைந்த பார்வதி அம்மாள் தள்ளாத வயதில், நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக இந்திய அரசின் முறையான விசா அனுமதி பெற்று, சென்னை வந்தார். ஆனால், தமிழக காவ‌ல்துறை‌யின‌ர் அவரை சென்னைக்குள் நுழைய முடியாதவாறு தடுத்து விட்டனர். தமிழக காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் இந்த செயல் சட்ட விரோதமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றதும் ஆகும்.
ஏற்கனவே 4 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வந்த பார்வதி அம்மாளை, உடனே திருப்பி அனுப்பியதால், அவரது உயிருக்கு எந்த பாதிப்பாவது ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’