பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது தெரிந்தும், உரிய பாதுகாப்பு அளிக்க முஷாரஃப் அரசு தவறிவிட்டது என்று பெனாசிர் புட்டோ படுகொலை குறித்து புலனாய்வு செய்த ஐ.நா. குழு கூறியுள்ளது.
2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலுள்ள ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிவிட்டு தனது பிரச்சார ஊர்த்தியில் ஏறி நின்றபோது பெனாசிர் புட்டோ சுடப்பட்டு உயரிழந்தார்.
பெனாசிர் படுகொலை குறித்து விசாரிக்க சிலி நாட்டிற்கான ஐ.நா. தூதர் ஹெரால்டோ முனோஸ் தலைமையில் மூன்று நிபுணர்கள் கொண்ட சுதந்திரக் குழு நியமிக்கப்பட்டது.
இக்குழு தனது அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளிக்க அது வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:
பாகிஸ்தான் அரசு பாதுகாக்க தவறிவிட்டது!
“பெனாசிர் புட்டோவிற்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிந்திருந்தும் பாகிஸ்தான் அரசு அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் பெனாசிர் படுகொலையை தவிர்த்திருக்க முடியும். அதனைச் செய்யத் தவறிவிட்டது முஷாரஃப் அரசு. அது மட்டுமல்ல, பெனாசிர் படுகொலை குறித்து முறையான புலனாய்வு செய்யவும் தவறிவிட்டது” என்று முனோஸ் குழு குற்றம் சாற்றியுள்ளது.
“பெனாசிர் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதை அரசு முழுமையாக அறிந்துள்ளது.ஆனால் அந்த அச்சுறுத்தல்களை போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெனாசிரை பாதுகாக்கும் பொறுப்பை ஒவ்வொரு அதிகாரியும் தட்டிக்கழித்துள்ளனர். பெனாசிரை பாதுகாக்கத் தவறியது மட்டுமின்றி, அவரது படுகொலைக்கு பொறுப்பானவர்கள் எவ்வாறு சதித்திட்டம் தீட்டி, நிறைவேற்றினார்கள், அதற்கு நிதி எங்கிருந்து வந்தது என்பதைக் கூட புலனாய்வு செய்யவில்லை” என்று செய்தியாளர்களிடம் பேசிய முனோஸ் கூறியுள்ளார்.
பெனாசிர் கொல்லப்பட்ட நாளன்று அவருடைய பாதுகாப்புப் பொறுப்பு பாகிஸ்தான் அரசையும், பஞ்சாப் மாகாண அரசையும், ராவல்பிண்டி காவல் துறையிடமும் இருந்தது. அப்போது அவருக்கு இருந்த அச்சுறுத்தலை அறிந்திருந்தும் அவர்கள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று முனோஸ் கூறியுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.யின் தலையீடு!
பெனாசிர் படுகொலையில் பாகிஸ்தானின் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலையீட்டையும் ஐ.நா.குழு கண்டித்துள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’