கொழும்புத்துறை சனசமூக நிலையத்தின் கட்டிடம் வெகுவிரைவில் புனரமைக்கப்பட்டு மாதாந்தம் பௌர்ணமி தினங்களில் கலை நிகழ்வுகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (14) மாலை யாழ் கொழும்புத்துறை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் இப்பகுதியில் இளைஞர் யுவதிகளிடையே வேலையில்லாப் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருவதை தான் உணர்வதாகவும் இந்நிலை யாழ் குடாநாடு முழுவதும் காணப்படுவதாகவும் தெரிவித்ததுடன் கூடிய விரைவில் யாழ் குடாநாட்டில் மூன்று பாரிய ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு அதன் மூலம் சுமார் 5 000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு தான் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதே நேரம் உள்@ர் உற்பத்திகளைப் பெருக்கி அதனூடாகவும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தையும் தான் விரைவில் செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது விளையாட்டுப் போட்டிகளில் தெரிவான வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பரிசில்களையும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
சனசமூக நிலையத்தின் தலைவர் நடராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் பிரதி மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி சனசமூக நிலையக் கட்டிடப் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கென அமைச்சர் அவர்கள் ஏற்கனவே 3 � இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’