வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 மார்ச், 2010

தொழிற்பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார்!

தொழிற்பயிற்சிகள் மூலம் நீங்களும் உங்களது சமூகமும் நன்மை பெறுவதுடன் உயர்வடைய வேண்டும் என்பதே எமது முக்கிய நோக்கமென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 05 உதவி அரசாங்கப் பிரிவுகளில் தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு இன்றைய தினம் (25) நடைபெற்ற சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள் இலங்கையின் எந்தப்பாகத்திலும் இப்பேற்பட்ட தொழிற்பயிற்சிகள் நடைபெறுவதில்லை என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் எனக் குறிப்பிட்டு இந்த ஒழுங்குகள் ஜனாதிபதியின் சிறப்பு ஒழுங்கு படுத்தலின் கீழ் எமது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது என்றும் இத்திட்டமானது 2001ம் ஆண்டிலிருந்து உதவி அரசாங்க பிரிவுகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார். 
தொழிற்பயிற்சிக்கேற்ப உதவித் தொகைகளையும் வழங்கி வருவதாகவும் நீங்கள் சிறப்பான முறையில் பயிற்சிகளைப் பெற்று அதன் மூலம் நீங்களும் உங்களது சமூகமும் நன்மை பெற வேண்டும் என்பதே எமது முக்கியமான குறிக்கோளாக இருக்கிறது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
அதேநேரம் பயிற்றுவித்த போதனாசிரியர்களுக்கு அமைச்சர் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். இன்றைய தினம் 245 பேருக்கு சன்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


































































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’