அரச ஊடகங்கள் என்மீது சேறு பூசுகின்றன. எனது தீர்ப்புகள் பிழையானவை எனக் கூறுகின்றன. நான் பிழையான தீர்ப்பு வழங்கியிருந்தால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று சிறையில் இருந்திருப்பார். சுனாமி தொடர்பான விடயத்தில் நான் சரியான தீர்ப்பினை வழங்கியிருந்தேன்" என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்தார்.
தற்போதைய நிலை தொடர்பாக விளக்கமளிக்கும் உரையொன்று நேற்று குருணாகல் 'சீசன்ஸ்' விருந்தகத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய முன்னாள் நீதியரசர் மேலும் தெரிவித்ததாவது,
"இன்று ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பாகப் பேச அரசாங்கக் குழுக்கள் பல செல்கின்றன. ஐரோப்பிய யுனியன் அவசரகாலச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. இலங்கையில் இன்று சட்டமும் ஜனநாயகமும் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளன.
எமது நாட்டில் ஜனநாயகம் மேலோங்கி இருந்தது. அந்த நாட்களில் நாம் வன்முறையை நினைக்கவில்லை. இன்று ஜனநாயகம் என்ற போர்வையில் வன்முறை மேலோங்கியுள்ளது. பாரிய பதாகைகளை வைப்பதே இன்றைய ஜனநாயகம்.
அன்றைய நாட்களில் ஆங்கில மொழிமூலம் கற்றவர்களுக்கே இடம் கிடைத்தது. வடக்கிலும் இதே நிலை. சிங்கள மொழியை அரச மொழியாக்கியமையால் தமிழர்கள் பலவற்றை இழந்தனர். இதனால் சட்டமும் ஜனநாயகமும் சீர்குலைந்தன. சாதாரண சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வந்தது.
ஊழலற்ற, தேசியத்துவம் மிக்க கலாசாரம் நாட்டுக்கு அவசியம். சரத் பொன்சேகா தலைமையிலேயே இது நடைபெற வேண்டும். அரசியலில் குடும்ப அங்கத்தவர்களை உள்வாங்கினால் ஜனநாயம் நிலைக்காது. படித்தவர்கள் இது குறித்துப் பாமர மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
ஆட்சி செய்பவர்கள் சட்டம், ஜனநாயகத்தைப் பேண வேண்டும். அப்போதுதான் நாடு சுபீட்சமடையும். அரசியல்வாதிகளும் நல்லாட்சி புரிய முடியும்.
சிரச நிறுவனத்தைத் தாக்கியவர்களைப் பொலிஸார் சிறுகுற்றம் என விடுதலை செய்துள்ளனர். இது வேடிக்கையான விடயம்.
இன்று அலரி மாளிகையில் தானசாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் முறையற்ற விதத்தில் பாவிக்கப்படுகின்றன. மக்களின் சொத்துக்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறகாக பயன்படுத்தப்படுகின்றன." இவ்வாறு அவர் தெரிவித்தார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’