வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 மார்ச், 2010

யாழ். சாவகச்சேரியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை டச்சு வீதி முகவரியில் இருந்து கடந்த சில தினங்களாக காணாமல் போயிருந்த பாடசாலை மாணவன் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சாவகச்சேரி நீதிவான் டி.ஜே.பிரபாகர் முன்னிலையில் இவரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.
இதனையடுத்து சடலம் இன்று மாலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இரவு 7 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாணவன் காணாமல் போனதன் பின்னர் இது தொடர்பில் கடந்த தினம் ஒன்றில் அரசியல் கட்சியொன்றின் தென்மாராச்சி பொறுப்பாளர் பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேவேளை அவருடைய வாகன சாரதி தலைமறைவாகியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் கட்சித்தரப்புகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் அருள்நாயகம் கபில்நாத்துடன் பயிலும் மூன்று மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று குறித்த மூன்று மாணவர்களில் ஒருவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து கபில்நாத்தின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’