வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 மார்ச், 2010

தனுன கடல் வழியாகத் தப்பியோடத் திட்டம்? இந்திய மீன்பிடிக் கப்பல், பணியாளர்கள் தடுத்துவைப்பு!


சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்ன கப்பலொன்றின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார் எனக் கடற்படைக்குக் கிடைத்த தகவலொன்றை அடுத்து, இந்திய மீன்பிடிக் கப்பலொன்றும், அதிலிருந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கால கடற்படைப் பிரிவினர் குறித்த இந்தியக் கப்பலை உடப்புப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே முற்றுகையிட்டுள்ளனர்.



இதன் பின்னர் கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட கப்பல் கடற்படையினரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அதிலிருந்தவர்கள் துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தங்கால கடற்படை அதிகாரிகளால் இந்திய மீன்பிடிக் கப்பலொன்று தடுத்துவைக்கப்பட்டுள்ளமை காரணமாக இலங்கை இந்திய நல்லெண்ண உறவு பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த இந்தியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இலங்கை இந்திய அரசுகளுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

துறைமுகக் பொலிஸார் நேற்று முன்நாள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன் கப்பலின் கப்டன் உள்ளிட்ட அதன் பணியாளர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளனர் எனக் கூறப்பட்டுகிறது.

எவ்வாறாயினும், இந்தக் கப்பல் இந்திய வர்த்தக நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது எனவும், இதனால் அதனை விடுவிக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இலங்கை அரசு வழக்கு தாக்கல் செய்தமை தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் அனைத்து இலங்கைக் கப்பல்களுக்கு எதிராகவும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு இந்திய கடலோரப் பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’