வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 மார்ச், 2010

இன்று மகா சிவராத்திரி தினம் அனுஷ்டிப்பு


இந்துக்களின் மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு, ஆலயங்கள் தோறும் நான்கு ஜாம காலப் பூசை வழிபாடுகள் நடைபெறும்.

திருக்கேதீஸ்வரம், கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயங்களில் சிவராத்திரி விசேடமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று நாட்டிலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் நள்ளிரவில் ஒலிபெருக்கி பாவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சகல இந்து ஆலயங்களின் பரிபாலகர்களும் தமது பிரதேசத்தின் பொலிஸ் நிலையங்களுடன் தொடர்பு கொண்டு அனுமதியினை பெற்றுக்கொள்ளலாம் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று அரச, வங்கி விடுமுறை தினமாகும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’