.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங் கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங் கையில் தனது நடவடிக்கைகளை ஆரம் பித்துள்ளது என வெளியான செய்திகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இந்த அமைப்பு இலங்கையில் தங்கியி ருக்கிறது என்று நிரூபிப்பதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை எனவும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மீளிணக்கப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த அமைப்பு இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறித்து அரசிற்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் "டெயிலிமிரர்' இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது என்று வெளியான செய்தியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும் மறுத்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’