வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 மார்ச், 2010

தம்புள்ளை வைத்தியசாலைக்கு இரவுநேரப் பணிக்குவரும் பெண் வைத்தியர்களை வழிமறித்து முத்தமிட்டுவந்த மர்ம ஆசாமி சிக்கினார்

தம்புள்ளை வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து இரவுநேரங்களில் அவசரக்கடமைக்காக வரும் பெண் வைத்தியர்களை இடையில் வழிமறித்து அவர்களை பல வந்தமாகக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுவந்த ஆசாமி ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அந்த வைத்தியசாலையில் அண்மையில் இடம் பற்றுள்ளது.
குறித்த ஆசாமி, துணிச்சல்மிக்க வைத்தியர் ஒருவரை முத்தமிட முயன்றபோதே மடக்கிப்பிடிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது.
 மிகநீண்ட காலமாகவே விடுதியில் தங்கியிருந்து இரவில் வைத்தியசாலைக்கு வரும் பெண்வைத்தியர்களை விடுதிக்கும் வைத்தியசாலைக்குமுள்ள இடைப்பட்ட தூரத்தில் வைத்து   மர்ம ஆசாமி ஒருவர் பலவந்தமாக முத்தமிட்டுவருகின்றார் என்ற கிசுகிசு வைத்தியசாலை வட்டாரத்தில் நிலவிவந்துள்ளது.
இந்தநிலையில் அண்மையில் விடுதியில் தங்கியிருந்த சிரேஷ்ட பெண்வைத் தியர் ஒருவர் அவசர அழைப்பின்பேரில் வைத்தியசாலையை நோக்கி விரைந்துள் ளார். அப்போது குறித்த ஆசாமி இருளில் அவரை வழிமறித்துக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றுள்ளார். எனினும் துணிச்சல்மிக்க அந்த வைத்தியர் புத்திசாது ரியமாக அவரை மடக்கிப்பிடித்துக்கொண்டு கூச்சலிட்டதில் திரண்ட வைத்திய சாலை ஊழியர்களும், ஏனையவர்களும் அந்த ஆசாமியைப் பிடித்து தம்புள்ள பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என வைத் திய அதிகாரி திருமதி இரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’