செல்லிட தொலைபேசிகள் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை அதிலே உலகில் வேறெந்த நாட்டையும் விட முன்னிலையில் இருக்கும் ஜப்பானில் தற்போது மருத்துவ குணாம்சம் கொண்டதாக விளம்பரப்படுத்தப்படும் ரிங்டோன்கள் பிரபலம் அடைந்து வருகின்றன.
தும்மல், சளி, கண் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்ற ஆங்கிலத்தில் ஹேஃபீவர் என்று சொல்லப்படுகின்ற இந்தப் பிரச்சினையில் இருந்து ஒருவருக்கு நிவாரணம் வழங்கக்கூடிய தொலைபேசி அழைப்பொலி ஒன்றை உருவாக்கியுள்ளதாக ஜப்பான் ரிங்டோன் லெபாரட்டரி என்ற நிறுவனம் கூறுகிறது. இந்த ஒலியோடு உங்கள் தொலைபேசியில் அழைப்பு வரும்போது தொலைபேசியை உங்கள் நாசிக்கு அருகே வைத்திருந்தால் இந்த ஒலி உங்கள் நாசியில் உள்ள மகரந்தத் துகள்களை வெளியில் கொண்டுவந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ரிங்டோன்கள் |
ஒருவர் உடல் இளைப்பதற்குக் உதவும் மருத்துவ பயன் கொண்ட ரிங்டோன் ஒன்றும் இருக்கிறதாம்.
ஜப்பான் ரிங்டோன் லெபாரட்டரியின் தலைமை அதிகாரி மட்சூமி சுஸூகி ஒரு ஒலிப்பதிவில் உள்ள குரல் உண்மையானதுதானா என்பதை உறுதிசெய்யும் வாய்ஸ்பிரிண்ட் தொழில்நுட்ப நிபுணர் ஆவர்.
உதாரணத்துக்கு, ஒஸாமா பின் லாடன் பேசியது என்று கூறி வெளியிடப்படும் ஒலிப்பதிவுகளில் உண்மையிலேயே அவர் குரல் உள்ளதா என்பது போன்றவற்றை உறுதிசெய்யக்கூடிய ஒரு நிபுணர் இவர்.
நாய் வளர்ப்பவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியிலும் இவர் இருக்கிறார்.
பௌ லிங்குவல் என்று பெயரிடப்பட்டுள்ள இக்கருவி ஒரு நாயின் வெவ்வேறு விதமான குரைப்புகளுக்கு அர்த்தம் சொல்லுமாம்.
ஆனால் மருத்துவ குணம் கொண்ட ரிங்டோன்கள் இவரது சிறப்பம்சம் ஆகியுள்ளன.
தொலைபேசி தொழிழ்நுட்பத்தில் ஜப்பான்
தொலைக்காட்சி பார்க்கக்கூடிய வசதியுடைய செல் தொலைபேசிகள் எல்லாம் அங்கே பல ஆண்டுகளாகவே அதிகம் புழக்கத்தில் இருந்துவருகின்றன.
அங்கே ஒரு கடையில் போய் பொருள் வாங்கிவிட்டு பணம் செலுத்தக்கூட உங்கள் செல் தொலைபேசியை ஒரு சென்சாரில் காட்டினால் போதும் சரியான தொகை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானாகச் சென்றுவிடும். அந்த அளவுக்கு நவீன வசதிகள் அங்கு உள்ளன.
செல்லிட தொலைபேசிகளுக்கான மென்பொருட்களையும் டிஜிட்டல் தரவுகளையும் விநியோகிக்கும் இண்டெக்ஸ் என்ற நிறுவனம்தான் மருத்துவப் பலன் கொண்டவை என்று தெரிவிக்கப்படும் இந்த ரிங்டோன்களை விநியோகித்துவருகிறது.
சூரியன் அடிப்படையிலான மேற்கத்திய ராசி வகைகளில் வெவ்வேறு ராசியில் பிறந்தவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ற பலன் தருவதாகக் கூறப்படும் வெவ்வேறு அழைப்பொலிகளை இந்த நிறுவனம் விநியோகிக்கிறது.
மருத்துவ ரீதியில் நன்மை இருக்கிறது என்பது பெரிய அளவில் இன்னும் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும், இந்த ரிங்டோன்கள் விற்பனையாகும் வேகத்தைப் பார்த்தால் பலன் இருக்கிறது போல்தான் தெரிகிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’