முன்னதாக நேற்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு ஹரிஹர சுதன் சுவாமி தலைமையில் வருகை தந்திருந்த சபரீச ஐயப்ப தேவஸ்தான நிர்வாகப் பிரதிநிதிகள் தமது தேவஸ்தானம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் குறிப்பாக நல்லூர் பிரதேச சபை நிர்வாகம் ஈபிடிபியின் வசம் இருந்தபோது அச்சமயம் தலைவராக இருந்த தோழர் நிஷாந்தன் ஊடாக பெற்றுக்கொண்ட அளப்பரிய உதவிகளை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் தொடர்ந்து பல தடவைகளில் பொருளாகவும் நிதியாகவும் உதவி செய்ததோடு மட்டுமன்றி பல தடவைகள் நேரடியாக விஜயம் செய்தும் தமக்கு உதவிபுரிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நீண்டகாலம் மக்கள் பணிபுரிய சபரீச ஐயப்பனை பிரார்த்திப்பதாகவும் தெரியப்படுத்தினார்கள்.
இதேவேளை தற்சமயம் போதிய ஒலிபெருக்கி வசதிகள் இன்றி தாம் சிரமப்படுவதாக தேவஸ்தான பிரதிநிதிகள் அறியத்தந்ததை தொடர்ந்து ஈழமக்கள் ஜனநாயக்கட்சி மூலமாக ஒலிபெருக்கி தொகுதி ஒன்றினை வழங்குவதற்கு அமைச்சர் அவர்கள் உடனடியாகவே நடவடிக்கை மேற்கொண்டமை விசேட அம்சமாகும். இதன் தொடர்ச்சியாக இன்றுகாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமலையில் வைத்து கோண்டாவில் சபரீச ஐயப்ப தேவஸ்தான நிர்வாகப் பிரதிநிதிகளான ஹரிஹர சுதன் சுவாமி மற்றும் இ. தவகோபால் சுவாமிகள் ஆகியோரிடம் ஒலிபெருக்கி தொகுதி உபகரணங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கையளித்தார். இந்நிகழ்வில் ஈபிடிபியின் தலைமைச் செயலக பொறுப்பாளர் ஆர்.கே.வின்சன் நல்லூர் தொகுதி பொறுப்பாளர் அ.ரவீந்திரதாசன் ஆகியோரும் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’