முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான இராணுவ நீதிமன்ற விசாரணைகள், எதிர்வரும் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இதற்காக ஜனாதிபதியினால், 3 பேரைக் கொண்ட இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேஜர் ஜெனரல் எச் எல் வீரதுங்க, மேஜர் ஜெனரல் ஏ எல் ஆர் விஜயதுங்க மற்றும் டீ ஏ ஜயதிலக்க ஆகியோரே இராணுவ நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், இராணுவ நீதி மற்றும் ஆலோசனை 109 ஆம் சரத்தின் கீழ், நான்கு குற்றச்சாட்டுக்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணை செய்யப்படவுள்ளன.
இந்த விசாரணைகள் கடற்படை தலைமையத்தில் நடைபெறவுள்ளன.
இதனை தவிர, இராணுவத்தில் பணியாற்றிய போது அரசியலில் ஈடுபட்டமை தொடர்பில் 3 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி இராணுவ நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளன.
இதற்கு மேலதிகமாக விசாரணைகளுக்கான சட்டத்தரணியாக ரியல் அட்மிரல் டபிள்யு பெர்னாந்து நியமிக்கப்பட்டுள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’