![]() | |
| கிழக்கு ஜெருசலேத்தில் யூதக்குடியிருப்புக்கள் |
இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா விசனம்
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதியில் 1,600 புதிய குடியிருப்புக்களை அமைக்கும் இஸ்ரேலின் தீர்மானம் மத்திய கிழக்கு சாமாதான முயற்சிகள் பற்றிய நம்பிக்கையை தகர்த்திருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அபாஸுடன் ரமல்லாவில் பேச்சுவார்த்தை நடத்தியபின் உரையாற்றிய பைடன், 'பதற்ற நிலையை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகளுக்கு தரப்பும் பொறுப்பு எனஅமெரிக்கா கருதும்’ என்று கூறினார்.
இஸ்ரேல் பற்றிய பைடனின் கண்டனம் வழக்கத்தைவிட சற்றுக் காட்டமாக இருந்தது என பி.பி.சியின் மத்திய கிழக்கு பணியகச் செய்தியாளர் கூறினார்.
''அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது’’ – இரான் அதிபர்
![]() | |
| இரான் அதிபர் காபூலில் |
அமெரிக்கா முன்னாளில் ஆதரவு வழங்கியவர்களையே இன்னாளில் இரட்டை வேடம் போட்டு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் எனக்கூறி தாக்குகிறது இரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
![]() | |
| அஹ்மதி நிஜாட் மற்றும் கர்சாய் |
தாலிபன் கிளர்ச்சியாளர்களுக்கு இரான் உதவி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகின்றது.
தாலிபன்களுடன் சமரசம் காணுமாறு கர்சாய் மீது கணிசமான வெளிநாட்டு வற்புறுத்தல்கள் எழுந்துவருகின்றன.
இந்த நிலையில் கர்சாய் பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சீன எதிர்ப்பு திபெத்தியர்களுக்கும் நேபாளப் பொலிசாருக்குமிடையே மோதல்
![]() | |
| நேபாளத்தில் திபெத்தியர் ஆர்ப்பாட்டம் (2009இல்) |
தலைநகர் காத்மண்டுவில் தலாய்லாமாவின் உருவப்படத்தை சுமந்தபடி, திபெத்தியர்கள் புத்த கோவிலில் பாரம்பரிய மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே இந்த மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
நேபாளத்தில் தற்போது வாழ்ந்துவரும் சுமார் 20 ஆயிரம் பேர் வரையான திபெத்தியர்கள் எந்த விதமான சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் நேபாள அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்பது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளதாக காத்மண்டுவிலுள்ள பி.பி.சி செய்தியாளர் தெரிவித்தார்.
ஆங் சான் சூச்சி அரசியல் கட்சிகளில் உறுப்புரிமை வகிப்பதைத் தடைசெய்யும் வகையில் பர்மாவில் சட்டம்
![]() | |
| ஆங் சான் சூச்சி |
பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சான் சூச்சி , எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்புரிமை வகிப்பதை தடுக்கும் முகமாக புதியதோர் தேர்தல் சட்டம் ஒன்றை பர்மாவின் இராணுவ அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
ஜனநாயகத்திற்கான தேசிய அணிகளான எதிர்க்கட்சி அமைப்பின் தலைவியான சூச்சி, எந்தவிதமான பதவிக்காகவும் போட்டியிடுவதும் ஏற்கனவே தடைசெய்யப்பட்டிருக்கின்றது.
இவ்வாண்டின் பிற்பகுதியில் நடக்கவுள்ள தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் எதிலும் ஆங் சான் சூச்சி இனி ஈடுபட முடியாது போகுமென பி.பி.சியின் பணியகச் செய்தியாளர் கூறுகிறார்.
பர்மிய அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவும் வருந்தத்தக்கது எனவும் அமெரி்க்க அரசு தெரிவித்துள்ளது.
செய்தியரங்கம்
![]() | |
| சம்பூரில் இடைத்தங்கல் முகாம் |
இலங்கை முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிலவும் முரண்பாடுகள்
இலங்கையில் பிப்ரவரி 25 வாக்கிலான நிலவரப்படி, அங்கே வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் உள்ள போரினால் இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் இன்னும் சுமார் 99,000 இடம் பெயர்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்று ஐ.நா மன்ற மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கை ஒன்று கூறுகிறது.
சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் இலங்கை வந்திருந்த போது, இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் தற்போது 70,000 பேர் மட்டுமே போரினால் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐ.நா மன்ற அலுவலகத்தின் இன்றைய அறிக்கைக்கும், இலங்கை அரசின் சமீபத்திய அறிக்கைக்கும் உள்ள முரண்பாடு குறித்து வினவப்பட்டபோது இலங்கையின் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தமிழோசைக்கு அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கையில் சீன முதலீடுகளும் நிதியுதவிகளும்
![]() | |
| ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் |
இலங்கையின் நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தித்துறைகளுடன் தொடர்புடைய மொத்தக் கடன் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான அளவு சீனாவிடமிருந்தே கிடைத்து வருவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது.
நாட்டின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்படும் இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கான இரண்டாவது தளமாக திகழவுள்ளது.
அதிகரித்துவரும் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் சீனாவிடமிருந்து இருநூறு மில்லியன் டொலர்கள் வரையான நிதி கிடைக்கின்றது.
விமான நிலையத்தின் நிர்மாண வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இதற்கு சற்று அயலிலேயே ஹம்பாந்தோட்டையில் பெருந்துறைமுகமொன்றுக்கான நிர்மாணப்பணிகளும் பெருமெடுப்பில் நடந்துவருகின்றன. இதற்கான நிதியும் சீனாவின் பாரிய கடனுதவி வழங்கும் நிறுவனமான ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வேலைத்திட்டங்களின் கட்டுமானப் பணிகளும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீனாவின் இந்த நிதியுதவிகள் மூலம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்திற்கான வீதி அபிவிருத்தி, தலைநகரில் பிரம்மாண்டமான அரங்கமொன்று, நிலக்கரி அனல்மின் ஆலைகள் என இன்னும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த வேலைத்திட்டங்கள் அனைத்திலுமே சீன கட்டுமான ஒப்பந்தக்காரர்களும் பெரும் எண்ணி்க்கையிலான அந்நாட்டு வேலையாட்களுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையினால் இலங்கையிலுள்ள கட்டுமானத்துறை நிறுவனங்களும் தொழிலாளர்களும் தமது வருமான வாய்ப்புகள் இழக்கப்படுவதாக கவலையடைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இலங்கையின் அண்டைநாடான இந்தியாவிலுள்ள சில அதிகாரிகளோ, தமது போட்டி நாடு இவ்வாறான பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்வதன் மூலம் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க முயல்வதாக அஞ்சுகின்றனர்.
இந்தியாவோ தன் பங்கிற்கு, இலங்கையின் தெற்கு ரயில்வே கட்டமைப்பை தரமுயர்த்துவதற்காக 70 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
''நளினியின் விடுதலை தொடர்பில் ஆலோசனை குழு அறிக்கையை தமிழக அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்யவேண்டும்’’- சென்னை உயர்நீதிமன்றம்
![]() | |
| சென்னை உயர் நீதிமன்றம் |
14 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்ற நளினியின் கோரிக்கையினை பரிசீலனை செய்ய குழு ஒன்றை நியமிக்குமாறு உத்திரவிட்ட உயர்நீதிமன்றத்தீர்ப்பினை எதிர்த்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் தர்மாராவ் மற்றும் சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
நளினியின் கோரிக்கையினை பரிசீலித்த வேலூர் ஆட்சியர் தலைமையிலான ஆலோசகர் குழுவின் அறிக்கை தற்போது தான் கிடைத்துள்ளது என்றும் அறிக்கையை சமர்ப்பிக்க 2 வார காலம் அவகாசம் தேவை என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்.
தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், அவ்வறிக்கையை தமிழக அரசு நாளையே தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
அரசு தரப்பு கேட்டுக்கொண்டபடி, அவ்வறிக்கையினை சீல் செய்யப்பட்ட உறையில் சமர்ப்பிக்கலாம் என்று நீதிபதிகள் அனுமதியளித்திருக்கின்றனர்.














தமிழோசை






0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’