
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது சக்தியையும் மீறி எமது மக்களின் நலன்சார்ந்து உழைத்து வருகின்றார் என்றும் யாழ் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அவர் மேற்கொண்டு வருவதுடன் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புக்கள் உட்பட எமது மக்களின் தேவைகளை அவர் படிப்படியாகப் பூர்த்தி செய்தும் வருகின்றார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான எம். சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (5) மாலை கோண்டாவில் குட்செட் வீதியிலுள்ள வளர்பிறை சனசமூக நிலையத்தில் அப்பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த சந்திரகுமார் அவர்கள், எமது கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது அமைச்சின் ஊடாக இதுவரையில் யாழ் குடாநாட்டு மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளமையை எமது மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் ஏனையவர்களைப் போல் தேர்தல் காலங்களில் மாத்திரம் எமது மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்கு நாம் இங்கு வருவதில்லை என்றும் தொடர்ந்து எமது மக்களுடனேயே தங்கியிருந்து அம்மக்களது துன்ப துயரங்களில் நாம் பங்கேற்று வருவதால் ஏனைய அரசியல் கட்சிகளிலிருந்து எமது கட்சி மாறுபட்டது என்றும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் நல்லூர் பகுதி அமைப்பாளர் ரவீந்திரன் வளர்பிறை சனசமூகத்தின் தலைவர் செயலாளர் உட்பட பலர் கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’